வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
தெப்பக்குளத்தில் குதித்து தாய் - மகள் தற்கொலை.. உதவிக்காக கூக்குரலிட்டு குமுறிய தெருநாய்கள்..! அரங்கேறிய பெரும்சோகம்.!
தாயும் - மகளும் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்ய, சி.சி.டி.வி-யில் தெருநாய்கள் இரண்டு உயிர்களை காப்பாற்ற அங்கும் இங்கும் ஓடி பரிதவித்த வீடியோ இடம்பெற்றுள்ளது.
விருதுநகரின் மையப்பகுதியில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் சிறுமியின் சடலம் மிதப்பாக தீயணைப்பு துறையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் சிறுமியின் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த விருதுநகர் பஜார் காவல் நிலைய அதிகாரிகள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் கடைகள் மற்றும்மக்களிடம் விசாரணை செய்துள்ளனர்.
அப்போது, சடலமாக மீட்கப்பட்டது கட்டையாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி கஜலட்சுமி என்பது தெரியவந்தது. கட்டையாபுரம் பகுதியில் வசித்து வரும் பழனிவேல், மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியின் மகளே கஜலட்சுமி. சம்பவத்தன்று கஜலட்சுமி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் மாமயமாகியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் சிறுமியின் சடலம் தெப்பக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, மீண்டும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தெப்பக்குளத்தில் இருந்த பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. இதனால் குடும்ப சண்டையால் தற்கொலை நடந்திருக்கலாம் என பழனிவேலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், பழனிவேல் - மகாலட்சுமி தம்பதி கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக ஜோடி காதல் திருமணம் செய்துள்ளனர்.
இதற்குள்ளாக சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராவையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தாயும் - மகளும் தற்கொலை செய்துகொள்ள தெப்பக்குளத்தின் சுவரை ஏறிக்குதித்த வீடியோ பதிவாகியுள்ளது. மேலும், இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து நீரில் விழுந்து உயிருக்கு தத்தளித்த நிலையில், அங்கு இருந்த தெருநாய்கள் அக்கம் பக்கத்தினரை உதவிக்காக அழைக்க அங்கும் இங்குமாக ஓடி கூக்குரலெழுப்பிய சமிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.