அரசியல் தமிழகம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தற்போதைய உடல்நிலை நிலவரம்.! மகிழ்ச்சியில் தே.மு.தி.க தொண்டர்கள்!

Summary:

vijayakanth health condition

தமிழ் திரையுலகில் ஒரு கால கட்டத்தில் சிறந்த நடிகராக கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த், இதனையடுத்து தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி, அதில் தலைவராக இருந்து வருகிறார் கேப்டன் விஜயகாந்த். ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது தேமுதிக எதிர்கட்சியாக இருந்து வந்தது. இதனையடுத்து தேமுதிகவின் செல்வாக்கு சற்று குறைய ஆரம்பித்தது.

கேப்டன் விஜயகாந்த், தனக்காக ஒரு பேச்சு, மேடைக்காக ஒரு பேச்சு என பேசுபவர் இல்லை. மனதில் தோன்றியதை அணைத்து இடத்திலும் ஓப்பனாக பேசுபவர் விஜயகாந்த். இதனால் தான் அவர் மீது மக்கள் கொண்டிருந்த அன்பு குறையாமல் இருந்தது. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே நடந்த பரிசோதனையில் விஜயகாந்திற்கு லேசான கொரோனா நோய் அறிகுறிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு உடல்நல கோளாறு காரணமாக  மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் அவர் மருத்துவனைக்கு சென்றபோது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், தற்போது சரிசெய்ப்பட்டதாகவும், தற்போது விஜயகாந்த் பூரண நலத்துடன் இருப்பதாகவும் கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த செய்தி தேமுதிக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


Advertisement