மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் உட்பட இருவர் கைது.. சிக்கியது எப்படி?
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த கொடுமை அம்பலமானது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பாலியல் தொல்லை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பென்னாத்தூர், வேடந்தவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள், மாணவிகளிடம் பாலியல் சீண்டல் மற்றும் தவறான தொடுதல் போன்ற காரியங்களை செய்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!
நேரில் ஆய்வு:
இதனையடுத்து, துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர் தில்லைநாயகி பள்ளிக்கு நேரில் sendru ஆய்வு செய்தார். இவர் கொடுத்த அறிக்கையின் பெயரில் சிறப்பு சிறார் காவல்துறை பிரிவு சமூக பணியாளர் மற்றும் குழந்தைகள் நலத்துறை உதவி எண் மேற்பார்வையாளர் ஆகியோர் நேரில் சென்றனர்.
சிறுமிகள் புகார்:
அச்சமயம், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் 13 பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி, ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுப்பது தெரியவந்தது.
கைது:
இதனையடுத்து, இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் ரவி (வயது 58), முரளிதரன் (வயது 42) ஆகியோரை கைது செய்தனர். இவர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: +2 மாணவி வன்கொடுமை.. தாயும், மகனும் அரங்கேற்றிய கொடூரம்..!