இடுப்பு, குதிகால் வலியால் அவதி; 43 வயது பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!!

திருச்சி மாவட்டத்திலுள்ள சோழம்பட்டி தெற்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் பூபாலன். இவரின் மனைவி வசந்தா (வயது 43). வசந்தாவுக்கு நீண்ட நாட்களாக இடுப்பு மற்றும் குதிகால் பகுதியில் வலி இருந்து வந்தது.
இதனால் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து போன அவர் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை அரை மயக்க நிலையில் மீட்ட அக்கம் பக்கத்தினர் அவசர ஊர்தி மூலமாக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.