திருச்சி: "ஐயா என்னை விட்ருங்க, உங்க கால்ல விழுறேன், மானம் போயிரும்" - பாலியல் தொல்லை கொடுத்து ஐயோ அம்மா கதறல்.!



Trichy Manapparai Minor Girl Sexual Harassment Case Accuse Beaten by Parents 

 

வசந்தகுமாரை சிறுமியின் பெற்றோர் ஆதங்கத்தில் அடித்து நொறுக்கும் காணொளி வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் செயல்பட்டு வந்த குரு வித்யாலயா பள்ளியில், 4 மற்றும் 5ம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு, பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. 

இதையும் படிங்க: சமயபுரம் பக்தர்களே உஷார்.! பாதயாத்திரை, இறுதி யாத்திரையாக மாறிய சோகம்.!

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வசந்தகுமார், சுதா, ஜெயலட்சுமி, பள்ளியின் நிர்வாகிகள் 2 பேர் என மொத்தமாக ஐந்து நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் நீதிமன்ற காவலில் இருக்கின்றனர். 

சிறுமிகள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதனிடையே, பள்ளியின் கேமிரா பதிவுகளை பெற்றோர் சோதித்தபோது, அதில் வசந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர் தரப்பில் சிலர் வசந்தகுமாரிடம் சரமாரி கேள்வியை எழுப்பினர். அப்போது, வசந்தகுமார் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும். என்னை விட்டுவிடுங்கள். மாணவர்கள் எனது பிள்ளைகள் போன்றவர்கள் என பேசி தப்ப முயன்றார். இதனால் அவரை நையப்புடைத்து உறவினர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பான கதறல் காட்சிகள் வெளியாகியுள்ளன.

வசந்தகுமாரிடம் சிறுமி தான் வரைந்த வரைபடத்தை காண்பித்தபோது, அதனை பார்ப்பதாக நடித்து கயவன் சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறான். இந்த விஷயம் கேமிராவில் பதிவாகி இருக்கிறது. இதனால் உச்சகட்ட ஆவேசத்தில் இருந்த பெற்றோரிடம், அம்மா, ஐயா என்னை விட்டுவிடுங்க, காப்பாத்துங்க என கூறினார். அம்மா என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் செயல்பட்ட உன்னை அந்த இடத்தில் மிதித்தே புரிய வைக்க வேண்டும் என பெற்றோர் ஆதங்கம் தெரிவித்த காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளன.
 

 
 

 

 

இதையும் படிங்க: 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது.!