வர்ணம் பூசுகையில் சோகம்... தொழிலாளி கால் இடறி பரிதாப பலி..!

வர்ணம் பூசுகையில் சோகம்... தொழிலாளி கால் இடறி பரிதாப பலி..!


Trichy man died electic Attack

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கல்லுக்குழி முதல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் சுரேஷ் மற்றும் கோபி ஆகியோருடன் அரூர் திரு.வி.க நகரில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் நேற்று பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மணிகண்டன் கால்தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்பே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.