குப்பை கொட்டச் சென்ற 14 வயது சிறுமி அதே இடத்தில் எரித்துக்கொலை..! திருச்சியில் நடந்த பரபரப்பு..! 3 தனிப்படை அமைப்பு..!



trichy-14-years-girl-murdered-news

திருச்சியில் 14 வயது சிறுமி ஒருவர் குப்பை கொட்ட சென்ற இடத்தில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர்  பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்துவந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துவந்த சிறுமி, நேற்று மதியம் வீட்டில் இருந்த குப்பைகளை கொடுத்துவதற்காக அருகில் இருக்கும் முள்காட்டிற்கு சென்றுள்ளார்.

குப்பை கொட்ட சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் குப்பை கொட்டும் இடத்தில் சென்று பார்த்தபோது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதே இடத்தில் கதறி துடித்துள்ளனர்.

இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் தீயாக பரவ, குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், குற்றவாளிகளை கைதுசெய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.