டிக்டாக் படுத்தும் பாடு! பெற்ற தாயால் மகனுக்கு நேர்ந்த கொடுமை; தவிக்கும் தந்தை.! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

டிக்டாக் படுத்தும் பாடு! பெற்ற தாயால் மகனுக்கு நேர்ந்த கொடுமை; தவிக்கும் தந்தை.!

திருச்சியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் மென் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும் காதல் மலர்ந்து கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

காதல் திருமணம் என்பதால் இவர்களது வாழ்க்கை நல்ல முறையில் சென்றுள்ளது. நாளடைவில் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மகேஷ் வேலைக்கு சென்ற பிறகு திவ்யா டிக் டாக்கில் தனது பொழுதை கழித்துள்ளார்.

துவக்கத்தில் டப்மாஸ் செய்து வந்துள்ளார் திவ்யா. காலப்போக்கில் டிக் டாக் நண்பர்கள் அதிகமாகி உள்ளார்கள். பிறகு அவர்களுடன் இணைந்து ஆடல் பாடலில் மூழ்கியுள்ளார்.   அதில் அன்சாரி என்ற நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மகேஷ் அதனை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் பிரச்சனை பெரிதாகி திவ்யா தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மகேஷிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு திவ்யா விண்ணப்பித்துள்ளார். அது தொடர்பான தகவல் மகேஷுக்கு வர அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவினர் சிலரை அழைத்துக் கொண்டு திவ்யா வீட்டிற்கு சென்று சமாதானம் பேசியுள்ளார். திவ்யா தாயார் சில காலம் அவகாசம் கொடுங்கள் அவள் சமாதானம் ஆகி விடுவாள் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே தாயார் வீட்டில் இருந்து தனது மகனுடன் வெளியேறிய திவ்யா அன்சாரியுடன் குடும்பம் நடத்தியுள்ளார். அங்கு திவ்யாவின் மகனை அன்சாரி அடித்து துன்புறுத்துவதாக அச்சிறுவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திவ்யா அம்மாவிடம் முறையிட்டுள்ளார்.

ஆனால் சட்ட ரீதியாக குழந்தையை தாயிடம் இருந்து பிரிக்க முடியாததால் தற்போது மகேஷூம், திவ்யாவின் தயாராரும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற எண்ணத்தில் கவலையுடன் உள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo