தமிழகம்

அப்படியா!! நம்ம டிராபிக் ராமசாமி உண்மையிலயே என்ன படித்துள்ளார் தெரியுமா?? சுவாரசிய தகவல்

Summary:

பிரபல சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் பலரும் இரங்க

பிரபல சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானவர் டிராபிக் ராமசாமி. விதியை மீறினால் அவர்கள் பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும் சரி, பெரிய முதலாளியாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது வழக்கு தொடுத்து ஒரு வழிசெய்துவிடுவார் டிராபிக் ராமசாமி.

ஏப்ரல் 1, 1934 ஆம் ஆண்டு பிறந்த இருக்கு தற்போது 87 வயதாகிறது. பெரிதாக படிக்கவில்லை என்றாலும், அந்த காலத்திலையே ட்ராபிக் ராமசாமி அவர்கள் 12 ஆம் வகுப்பு வரை முடித்துள்ளார். பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார். ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.

பல்வேறு பொதுநல வழக்குகள் தொடர்ந்ததால் பிரபலமான இவர், இன்று (04-05-2021) உடல்நல குறைவால் தனது 87 வது வயதில் மரணமடைந்தார்.


Advertisement