வியாபாரி மாரடைப்பால் உயிரிழப்பு.. சாலையில் வாகனம் ஓட்டி கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபரீதம்..!



trader-died-due-to-heart-attack-tragedy-happened-while

கடலூர் மாவட்டம் திருவதிகை வள்ளி கந்தன் நகரில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 3 சக்கர ஆட்டோவில் பாத்திர வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று குமார் வழக்கம் போல காலை வியாபாரத்திற்காக தனது 3 சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அன்று
குமார் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக பாத்திரங்களை விற்று கொண்டு சென்றுள்ளார். அப்போது வாகனம் ஒட்டி கொண்டிருக்கும்போதே திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

Trader

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் மயங்கி கிடந்த குமாரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாகனம் ஒட்டி கொண்டிருக்கும்போதே வியாபாரி மாரடைப்பால் மயங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.