#Breaking: 1 - 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 06ல் பள்ளிகள் திறப்பு - தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அறிவிப்பு.!  



tn-school-opening-date-announcement

 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு குறித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

school reopen

கோடை விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்கள் அனைவரும் ஜூன் 6-ம் தேதி பள்ளிக்கு வர உள்ளதால், அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு நோட்டுகளை அனுப்பி வைக்க கோரி ஏற்கனவே முன்னறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் மாஸ்டர் பிளான்; பொருளாதார முன்னேற்றத்தில் அடியெடுத்துவைக்கப்போகும் பெண்கள்.!

மக்களவை பொதுத் தேர்தல் 2024 முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: மகளிர் விடுதிக்குள் புகுந்து செல்போன் திருட்டு; ஸ்மார்ட் போனை திருடி ஸ்மார்ட் பிசினஸ்.. 3 பேர் கைது.!