தமிழ்நாடு அரசின் மாஸ்டர் பிளான்; பொருளாதார முன்னேற்றத்தில் அடியெடுத்துவைக்கப்போகும் பெண்கள்.!TN Govt Plan To Stitch School Dress Project given to women Tailors 

 

2024 - 2025ம் கல்வியாண்டில் மாணவர்கள் அடியெடுத்து வைக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. ஜூன் 04 ம் தேதிக்கு பின் எப்போதும் வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை, எதிர்வரும் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கான பள்ளி சீருடைகள் வழங்குதல், புத்தகம் அச்சடித்தல் உட்பட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய மாணவர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: ஹாய் அனுப்பாதீங்க; வேண்டுகோள் வைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்..! காரணம் இதுதான்..!

பெண் தையளர்களிடம் பணியை ஒப்படைக்க முடிவு

இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணிகள் பெண் டையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. சோதனையின் அடிப்படையில் 100 பள்ளிகளுக்கு முதற்கட்ட ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், 37 இலட்சம் மாணவர்களுக்கான 2 சீருடை தைத்துக்கும் பணிகள் பெண்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் பல்லாயிரக்கணக்கான பெண்களின் பொருளாதாரம் மேம்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: மாலை 4 மணிவரையில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!