தமிழகம்

தமிழகத்தில் வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்!

Summary:

Tn plus 2 results

2018 - 19 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் இன்று காலை வெளியானது. கடந்த மார்ச் மாதம் அனைத்து தேர்வுகளும் முடிவுற்ற நிலையில் இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் வெளியான இந்த பிளஸ் 2 தேர்வு முடிவில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் அதிகப்படியான சதவிகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவில் மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் மாவட்ட ரீதியான தேர்ச்சி விகிதத்தில் 95.37 சதவிகிதத்தில் திருப்பூர் முதலிடத்திலும், 95.23 சதவீதத்தில் ஈரோடு இரண்டாம் இடத்தில், 95.15 சதவீதத்துடன் பெரம்பலூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன.


Advertisement