90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
அடிதடி, கல்வீச்சு.. பள்ளி மாணவர்களுக்குள் பயங்கர மோதல்.. நடந்த பரபரப்பு சம்பவம்.!

அரசுப்பள்ளி மாணவர்களின் மோதலை தடுக்க முயன்ற மக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதே பகுதியில் உள்ள குமார் நகரில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு பள்ளி மாணவர்களுக்கும் இடையே கடந்த வாரம் சிறு மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட நிலையில், கற்கள் வீசி தாக்குதலும் நடைபெற்றுள்ளது. மோதலை தடுக்க சென்ற பொதுமக்களை மாணவர்கள் குழுவாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மோதலில் ஈடுபட்ட மாணாக்கர்களில் சிக்கியவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இவர்கள் மோதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.