#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
தேர்தல் தோல்வியால் விரக்தி.. ரூ.50 ஆயிரம் கடனால், ம.நீ.ம வேட்பாளர் தற்கொலை..!
தேர்தல் தோல்வியால் விரக்தி.. ரூ.50 ஆயிரம் கடனால், ம.நீ.ம வேட்பாளர் தற்கொலை..!

திருப்பூர் மாநகராட்சி 36 ஆவது வார்டில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மணி என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இவர் தேர்தலுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி, தீவிர பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
தேர்தல் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான நிலையில், தேர்தலில் அவருக்கு மக்கள் 44 வாக்குகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் தோல்வி அடைந்தார்.
தேர்தலுக்காக வாங்கி செலவு செய்த கடன் தொகை பிரச்சனை அடுத்ததாக எழுந்துகொள்ள, விரக்தியடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார்.
இந்த விஷயம் தொடர்பாக திருப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.