கட்டிட வேலைக்கு அழைத்துச்சென்று சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி; திருப்பூரில் அதிர்ச்சி.!Tiruppur Minor Girl Rape 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், தேர்பட்டி கிராமத்தில் வசித்து வரும் நபர் சிவகுமார் (வயது 38). இவர் கட்டிட தொழிலாளி ஆவார். அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, இவர் அவ்வப்போது தன்னுடன் கட்டிட வேலைகளுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். 

இதனிடையே, சிறுமியுடன் நெருக்கம் காண்பித்த சிவகுமார், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தயார் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியுடன் தனிமையில் நெருங்கி பலாத்காரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 

பலாத்காரத்தால் கர்ப்பம்

ஒருசமயத்தில் இவ்விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவரவே, அவர் மகளின் எதிர்காலம் கருதி வேறொரு இடத்தில் வீடு பார்த்து குடியேறியுள்ளார். அங்கும் சிவகுமார் வந்து பழகி இருக்கிறார். 

இதையும் படிங்க: நண்பனின் மனைவியை அபகரிக்க நினைத்த தோழன்.. வேலை வாங்கிக்கொடுப்பதாக பச்சை துரோகம்.! 

இந்நிலையில், சிறுமி வயிற்று வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அங்கு கர்ப்பம் உறுதியானது. இதனையடுத்து, மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: 15 வயது மகளை 8 மாத கர்ப்பமாக்கிய தந்தை; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.!