15 வயது மகளை 8 மாத கர்ப்பமாக்கிய தந்தை; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.!Virudhunagar Srivilliputhur Court Judgement on Step Daughter Rape Case 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு, பகவதி நகரில் வசித்து வருபவர் வெள்ளையன் (வயது 48). இவரின் மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார். இதன்பின் வெள்ளையன் இரண்டாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். 

அந்த பெண்மணி முதல் திருமணத்தில் 4 மகள்கள் மற்றும் 3 மகன்கள் என 7 குழந்தைகள் இருந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் வனக்காப்பாளராக வேலை பார்த்து வந்த வெள்ளையன், ஓராண்டாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு.!

15 வயது சிறுமி 8 மாத கர்ப்பம்

பெண்ணின் 4 மகள்களில் 15 வயதுடைய சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குழந்தைகள் நலத்துறையினர், காவல் துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில், சிறுமியின் வளர்ப்பு தந்தையான வெள்ளையன், சிறுமியை பலாத்காரம் செய்தது அம்பலமானது. இதனையடுத்து, வெள்ளையனுக்கு எதிராக போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த திருவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி தீர்ப்பு

இந்நிலையில், தற்போது வழக்கின் இறுதி தீர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியான வெள்ளையனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதி பகவதியம்மாள் வழங்கினார்.

இதையும் படிங்க: காதலில் தொடங்கி மூவர் கும்பலால் சீரழிக்கப்பட்ட சிறுமி; வீடியோ எடுத்து மிரட்டி நடந்த கொடுமை.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.!