கணவன் - மனைவி செய்யும் வேலையா இது?.. அதிகாரிகள் பெயரில் தம்பதியின் அதிர்ச்சி செயல்.. இளம் ஜோடி கம்பி எண்ணும் பரிதாபம்.! 

கணவன் - மனைவி செய்யும் வேலையா இது?.. அதிகாரிகள் பெயரில் தம்பதியின் அதிர்ச்சி செயல்.. இளம் ஜோடி கம்பி எண்ணும் பரிதாபம்.! 



Tiruppur Kangeyam Couple Forgery 

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், தாராபுரம் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் சிவசாமி. மனைவி தனலட்சுமி (வயது 43). சம்பவத்தன்று தனலட்சுமி தனது கடையில் இருக்கையில், அவரின் கடைக்கு தம்பதி காரில் வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் தங்களை கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  என்று கூறி, கடையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர். 

சோதனை நடைபெறாமல் இருக்க ரூ.2,500 பணமும் கேட்டு மிரட்ட, அரசு உத்தரவை மீறிய பயத்தில் உண்மை தெரியாமல் விழிபிதுங்கியபடி ரூ.2,500 பணத்தையும் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய இருவரும் நொடிப்பொழுதை தாமதிக்காமல், பரபரப்புடன் கிளம்பிச்சென்றனர்.

இதனால் சந்தேகமடைந்த தனலட்சுமி, தனக்கு தெரிந்த பிற கடைகளிடம் விசாரித்து பார்த்தபோது பிற கடைகளுக்கு யாரும் வரவில்லை. இதனால் கணவரிடம் விஷயத்தை தெரிவிக்க, அவர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் காரின் பதிவெண் கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபட்ட போலி அதிகாரிகளான தம்பதிகள் சக்திவேல் (வயது 24), சத்யபிரியா (வயது 23) கைது செய்யப்பட்டனர். இருவரும் கோவை சிறையில் விசாரணைக்கு பின் அடைக்கப்பட்டனர். 

கூலிவேலைக்கு சென்று வரும் தம்பதிகள், வருமானத்திற்காக மோசடி செயலில் ஈடுபட்டதும் அம்பலமானது.