நூதன முறையில் மூதாட்டியிடம் 14 சவரன் நகைகள் கொள்ளை.. சிசிடிவி கேமிரா காட்சிகள் வைரல்.!

நூதன முறையில் மூதாட்டியிடம் 14 சவரன் நகைகள் கொள்ளை.. சிசிடிவி கேமிரா காட்சிகள் வைரல்.!


Tirunelveli NGO Colony Aged Woman Jewel Robbery by 2 Man Gang

மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி 14 பவுன் நகைகளை பறித்து சென்ற வாலிபர்கள் மதுரை காவல் துறையினர் வசம் சிக்கியுள்ளனர். 

திருநெல்வேலியில் உள்ள என்.ஜி.ஓ காலனி பகுதியை சார்ந்தவர் வேலம்மாள் (வயது 63). இவர் சம்பவத்தன்று மளிகை கடைக்கு சென்ற நிலையில், அங்கு வந்த 2 பேர் தங்களை காவல் துறை அதிகாரிகள் என்று கூறி அறிமுகம் செய்து, தங்களின் நகைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். 

மாற்று சீருடையில் வந்தவர்கள் 2 பேரும் காவல் துறையினர் தோனியில் தென்பட்டதால், மூதாட்டியும் அவர்களை காவல் துறையினர் என்று எண்ணியுள்ளார். இந்நிலையில், ஒரு தாளை மூதாட்டியின் கைகளில் கொடுத்து, கழுத்தில் அணிந்திருந்த நகைகளை இதில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துள்ளனர்.

மூதாட்டியும் போலி அதிகாரிகள் முன்னிலையில் நகைகளை எடுத்து தாளில் வைத்து தனது பைக்குள் வைத்துஒண்டா நிலையில், வீட்டிற்கு சென்று பார்த்தபோது நகைகள் இல்லை. சிறுசிறு அளவிலான கற்களே அதில் இருந்துள்ளது. போலி அதிகாரிகளால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த மூதாட்டி வேலம்மாள், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்கையில், 2 பேர் நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, அவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவர்களின் அடையாளத்தை வைத்து இருவரும் மதுரையை சார்ந்தவர்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். 

உடனடியாக தகவல் மதுரை காவல் துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், மதுரை காவல் துறையினர் இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தி கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நூதன திருட்டு மோசடி குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.