வீட்டின் கதவு வழியே உள்ளே நுழைந்த கட்டுவிரியன் பாம்பு! அடுத்த நொடி பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை....! நெகிழ்ச்சி சம்பவம்...!!!



tirunelveli-cat-saves-family-from-poisonous-snake

திருநெல்வேலி டவுண் அருகே நைனார்குளம் தெருவில் வீட்டுக்குள் புக முயன்ற கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் குட்டிப் பாம்பை வளர்ப்புப் பூனை தாக்கி கொன்றது. வீட்டில் இருந்தவர்கள் பாம்பை கவனிக்காத நிலையில், ஆபத்தை உணர்ந்த பூனை உரத்த குரலில் சத்தமிட்டு எச்சரித்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியிலிருந்து தப்பியதுடன், சிறு குழந்தைகளும் பாதுகாப்பாக இருந்தனர்.

வாசல் வழியாக நுழைய முயன்ற பாம்பு

உசேன் பாபுவின் வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாக சுமார் 2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் குட்டிப் பாம்பு ஒன்று உள்ளே நுழைய முயன்றுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் அதை கவனிக்காத நிலையில், அங்கு வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்புப் பூனை பாம்பை பார்த்து ஆபத்தை உணர்ந்துள்ளது.

இதையும் படிங்க: குடிமகன்களுக்கு குட் நியூஸ்.. டாஸ்மாக் பார்களில் வரப்போகும் புதிய வசதி! அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்!

உரத்த சத்தத்தால் குடும்பத்தினருக்கு எச்சரிக்கை

உடனே ஆக்ரோஷமாக ‘மியாவ்’ என பூனை சத்தமிட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் வாசல் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உசேன் பாபு பாம்பைப் பிடிக்க முயன்றபோது, அது சீறியதாக கூறப்படுகிறது.

பாம்பை தாக்கி கொன்ற பூனை

நிலைமையை உணர்ந்த பூனை சற்றும் தாமதிக்காமல் பாம்பின் மீது பாய்ந்தது. தொடர்ந்து அதைக் கடித்து குதறியதில் கட்டுவிரியன் பாம்பு உயிரிழந்தது. வீட்டிலும் அருகிலும் சிறு குழந்தைகள் இருந்த நிலையில், சரியான நேரத்தில் எச்சரித்து ஆபத்தைத் தடுத்த பூனையின் துணிச்சல் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய செல்லப் பூனைக்கு உசேன் பாபுவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பூனை பாம்பை தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

இதையும் படிங்க: ஃபேஸ்புக் காதலுக்காக எல்லை தாண்டிய 14 வயது சிறுவன்.. தங்கச் சங்கிலியை கொடுத்து படகேறிய விபரீதம்!