ஃபேஸ்புக் காதலுக்காக எல்லை தாண்டிய 14 வயது சிறுவன்.. தங்கச் சங்கிலியை கொடுத்து படகேறிய விபரீதம்!



Facebook love boy escape srilanka

ஃபேஸ்புக் மூலம் இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் அறிமுகமான இந்தியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், அவரை நேரில் சந்திப்பதற்காக சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கை சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சென்ற சிறுவனை தலைமன்னார் காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்பகுதியில் இருந்து எந்தவித பயண ஆவணங்களும் இல்லாமல் படகில் ஏறி சிறுவன் இலங்கைக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. படகில் பயணம் செய்வதற்கான கட்டணமாக தனது தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் கொடுத்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை சென்றடைந்த சிறுவன் தலைமன்னார் பகுதியில் இருந்தபோது காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை இலங்கை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க:  2 மனைவிகள்… 19 வயது கல்லூரி மாணவியுடன் தப்பியோட்டம்? – சிக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்!

சிறுவனின் வயதை கருத்தில் கொண்ட நீதிமன்றம், அவரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறுவன் தொடர்பான தகவல்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சமூக வலைதளம் மூலம் சிறுவனுக்கு அறிமுகமான இலங்கை சிறுமி யார், இருவருக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு உருவானது, சிறுவன் இலங்கை செல்வதற்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா என்பது குறித்து தலைமன்னார் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 7 மாத கர்ப்பிணி காதலி அடித்துக்கொலை.. நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.! சேலத்தில் திக்., திக் சம்பவம்.!