கள்ளக்காதலால் அவமானம்.. அக்காவை கொடூரமாக கொலை செய்த சகோதரன்.. தூத்துக்குடியில் பயங்கரம்.!
தூத்துக்குடியில் அக்காவை தம்பி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
பிரிந்து வாழ்கிறார்கள்:
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர், இரயில்வேகேட் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவரின் மகள் சண்முகதாய் என்ற சுமித்ரா (வயது 35). இவருக்கும், இவரின் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய காரணத்தால், கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு வாரத்துக்கு முன் இப்பகுதியில் இருக்கும் வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!
கண்டித்து இருக்கிறார்:
இதனிடையே, சுமித்ரா சிலருடன் தகாத உறவில் இருப்பதாக, அவரின் தம்பிக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர் புளியங்குளம், இந்திரா காலனி, வடக்குத்தெருவை சேர்ந்த முத்துராஜா (வயது 27) ஆவார். இந்த தகவலை அறிந்த முத்துராஜா அக்கா சுமித்ராவிடம் பேசி கண்டித்து இருக்கிறார்.
வாக்குவாதம்:
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், குடும்பத்துக்கு அவமானம் ஏற்படுவதாக தெரிவித்த முத்துராஜா, அக்காவை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி, நேற்று இரவில் முத்துராஜாவும், அவரின் நண்பர் புளியங்குளம் (வயது 26) என்பவரும் இருசக்கர வாகனத்தில் சுமித்ராவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

பரிதாப பலி:
அங்கு முத்துராஜா அக்காவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியபோது ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து முத்துராஜா அக்கா சுமித்ராவை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்தவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குற்றவாளிகள் கைது:
கொலை சம்பவத்துக்குப்பின் முத்துராஜா, வசந்த் ஆகியோர் தப்பியோடியுள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல்துறையினர், சுமித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முத்துராஜா, வசந்த் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் குடும்பத்தின் மானத்தை காக்க இவ்வாறு செய்ததாகவும் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: 'ஆயிரம் இருந்தாலும் அவ பொண்டாட்டி.. நீ...' மனைவியை திட்டியதால் கொடூர கொலை.! திடுக் சம்பவம்.!