தமிழகம் Covid-19

திருமாவளவனின் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. திருமாவளவனின் மூத்த சகோதரி கொரோனாவால் மரணம்..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி கொரோனாவால் மரணமடைந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

65 வயதாகும் பானுமதி அவர்கள்  தொல். திருமாவளவனின் மூத்த சகோதரி ஆவர். திருமாவளவனின் இரண்டாவது சகோதரி பிறக்கும்போதே உயிரிழந்துவிட்டார். திருமாவளவன் மூன்றாவதாக பிறந்தவர். திருமாவளவனின் சகோதரி மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement