தமிழகம்

ஒரு மணி நேர போராட்டம்... கடைசியில் இப்படி அச்சே.. திருடனுக்கு வந்த சோதனை.!

Summary:

ஒரு மணி நேர போராட்டம்... கடைசியில் இப்படி அச்சே.. திருடனுக்கு வந்த சோதனை.!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள நாடியம்மன் கோவிலின் பூட்டை உடைக்க ஒரு மணி நேரம் போராடியும் கடைசியில் பூட்டை உடைக்காமலே போக திருடன் ஏமாற்றத்துடன் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த மாதம் மர்ம நபர் ஒருவர் முககவசம் அணிந்தப்படி பூட்டிய அம்மன் கோவிலின் கதவை இரும்பு ராடை கொண்டு அடித்து உடைக்க முயன்றுள்ளார்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடியுள்ளார்.ஆனால் அவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது.

கோவிலின் பூட்டு பலமாக இருந்ததால் அவரால் கடைசி வரை பூட்டை உடைக்காமலே போகவே ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளார்.இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


Advertisement