2 பெண்கள், 12 ஆம் வகுப்பு மாணவர் மாயம்... வலைவீசும் காவல்துறை.. நடந்தது என்ன?..!

2 பெண்கள், 12 ஆம் வகுப்பு மாணவர் மாயம்... வலைவீசும் காவல்துறை.. நடந்தது என்ன?..!


Theni 2 Ladies and 12 th Student Missing

வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து மாயமானதால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தேனி மாவட்டத்திலுள்ள தப்புகுண்டு பகுதியைச் சார்ந்தவர் மாரிச்சாமி. இவரின் மனைவி சித்ரா (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று சித்ரா திடீரென மாயமான நிலையில் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், கணவர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தேனி பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். அவரின் மனைவி ராதா ருக்மணி (வயது 21). இவர் கடைக்கு செல்வதாக கூறி சென்று மீண்டும் வீட்டிற்கு வராததால், இது தொடர்பாக தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவரின் மகன் மாதவன் (வயது 16). மாதவன் அங்குள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முடித்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்பு செல்ல உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் அருகேயுள்ள பாட்டி வீட்டில் தூங்குவதற்கு செல்வது செல்வது வழக்கம். 

நேற்று அங்கு சென்ற மாதவன் நண்பரின் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற நிலையில், அதன் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.