தமிழகம்

காதலிப்பதாக கூறி வாலிபர் செய்த மோசமான செயல்.! வாயும் வயிறுமாக வந்து நின்ற சிறுமி.!

Summary:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ம

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது.   

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த விக்ரம் என்ற 21 வயது நிரம்பிய நபர் அப்பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் அந்த சிறுமி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, விக்ரம் மறுத்துள்ளார். 

மேலும், அந்த சிறுமியை ஒரு கோவிலுக்கு வரவழைத்து, தன்னை திருமணம் செய்ய வலியுறுத்தினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்து சிறையில்அடைத்தனர்.


Advertisement