கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; தற்போது வெளியான சிசிடிவி காட்சிகள் அப்பட்டமான பொய்!.. ஸ்ரீமதியின் தாய் குற்றச்சாட்டு..!

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; தற்போது வெளியான சிசிடிவி காட்சிகள் அப்பட்டமான பொய்!.. ஸ்ரீமதியின் தாய் குற்றச்சாட்டு..!


The recently released CCTV footage is a blatant lie accused by the mother of Smt

கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து தினம் தினம் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. அது போல் நேற்று வெளியான ஒரு செய்தி, ஸ்ரீமதி உடலை நான்கு பேர் தூக்கிச் செல்வது போல் சிசிடிவி காட்சி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சிசிடிவி காட்சிகள் அனைத்துமே பொய்யானது என்று மரணமடைந்த ஸ்ரீமதியின் தாய் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இன்று இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிடுவோர் ஏன் என் மகள் இறந்த அன்று ஜூலை 13-ஆம் தேதியே எங்களிடம் காண்பிக்கவில்லை. 

மேலும் எங்களிடம் ஜூலை 13-ஆம் தேதி ஒரு நிமிட காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சியை 3.30 மணிக்கு காண்பித்தார்கள், அதில் எனது மகளை தூக்கி செல்வது போல் எதுவுமே இல்லை. இந்நிலையில் இந்த சிசிடிவி பதிவு காட்சிகளை யார்  வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்று வெளியான சிசிடிவி காட்சி அப்பட்டமான பொய் என்று உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் கூறியுள்ளார்.