குடித்துவிட்டு வந்து மனைவியை வம்புக்கிழுத்த கணவன்... ஆத்திரத்தில் தலையில் கல்லை தூக்கிப் போட்ட மனைவி..!!The husband who came drunk and made a fuss of his wife... The wife threw a stone on her head in rage..

குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவனின் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

கோவை மாவட்டம் நாயக்கனூர் பகுதியில் வசித்து வந்தவர்  செல்வராஜ் (60) இவரது மனைவி கலாமணி (55). மதுப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக இருந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று இரவு குடித்து விட்டு போதையில் வந்த செல்வராஜ் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கோபமடைந்த அவரது மனைவி கலாமணி ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

கலாமணி வீட்டிலிருந்து வெளியேறிய பின்பும் அவரை தகாத வார்த்தைகளால் செல்வராஜ் திட்டியுள்ளார். இதனால் கலாமணி வெளியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து ஆத்திரத்தில் செல்வராஜின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சத்தம் போட்டு அலறியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த, அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளர் செல்வராஜை பரிசோதனை செய்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து செல்வராஜின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் அவரது உடலை உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து கலாமணியை கைது செய்தனர்.