அடுத்தடுத்து ஏற்பட்ட நெஞ்சுவலி.. பதட்டப்படாமல் சாமார்த்தியமாக பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்.!



The government bus driver saved the passengers without panicking after a series of chest pains!!

தஞ்சாவூரில் இருந்து மதுரையை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 70 பயணிகள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த பேருந்தை திருவையாறு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் வீரமணி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பேருந்தை வீரமணி ஓட்டி கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஒரு மருந்து கடையில் பேருந்தை நிறுத்தி மாத்திரை வாங்கி சாப்பிட்டு விட்டு மீண்டும் பேருந்து ஓட்டும் பணியை தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் வீரமணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் வீரமணி பயணிகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்று எண்ணி பதட்டப்படாமல் மெதுவாக பேருந்தை ஒரு ஓரமாக நிறுத்தியுள்ளார். பின் பயணிகளை இறங்கி வேறொரு பேருந்தில் ஏறி செல்லுமாறு கூறிவிட்டனர். இதனைதொடர்ந்து வீரமணி நடத்துனரின் உதவியோடு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் அடுத்தடுத்து திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட போதும்‌ 70 பயணிகளின் உயிரை சமார்த்தியமாக பேருந்து ஓட்டுனர் பாதுகாத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.