தின்னரில் 2 மகள்களுக்கு எலிபேஸ்ட் கலந்துகொடுத்த தாய்.. தானும் தற்கொலை முயற்சி.. 4 வயது மகள் பலி.!!

தின்னரில் 2 மகள்களுக்கு எலிபேஸ்ட் கலந்துகொடுத்த தாய்.. தானும் தற்கொலை முயற்சி.. 4 வயது மகள் பலி.!!


thanjavur-thiruvaiyaru-mother-killed-child-eat-rat-pois

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 27). தம்பதிகளுக்கு அகஸ்டி என்ற நான்கு வயது குழந்தையும், அனுஸ்ரீ என்ற ஏழு வயது குழந்தையும் இருக்கின்றனர். 

இந்நிலையில் சம்பவத்தன்று நடந்த கணவன் - மனைவி குடும்பத் தகராறு மனமுடைந்து போன தாய் எலி பேஸ்ட்டை (Rat Paste Poison) தின்னரில் கலந்து குடித்துவிட்டு, குழந்தைகளுக்கும் அதனை கொடுத்துள்ளார். 

இதையடுத்து மீட்கப்பட்ட மூவரும் உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் அகஸ்டி சென்னை எழும்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக குழந்தை ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.