பொங்கல் பரிசு தருவதற்கு ரூ.2363 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசின் அரசாணையால் பொதுமக்கள் மகிழ்ச்சி! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

பொங்கல் பரிசு தருவதற்கு ரூ.2363 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசின் அரசாணையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழர்களின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விழாவான பொங்கல் பண்டிகை தமிழக மக்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக சென்ற ஆண்டு, வறட்சியின் பாதிப்பு, ஏழை மக்களை பாதிக்காத வகையில், அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத்திற்கு, பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை தமிழக அரசு வழங்கியது.

அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, கடந்த ஆண்டை போல், அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, தலா,  1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று  அறிவித்திருந்தார்.

அதன்படி பொங்கல் பரிசாக ரூபாய் 1000 தர ரூ.2363 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி ரேஷன் அட்டைதாரர்களாக மாற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பொங்கல் பரிசு பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo