ரூ.9 கோடி இழப்பீடு வேண்டும்.. நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கு.! ஏன்? என்ன நடந்தது?
கொரோனா பாதிப்பு..! சென்னை முழுவதும் உள்ள டீ கடைகளுக்கு அதிரடி உத்தரவு..!

கொரோனா வைரஸ் பாதிக்கு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இதுவரை 2 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இந்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மக்கள் ஒன்றுகூடும் இடங்கள், வணிக வளாகங்கள் போன்றவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற தி.நகர் ரங்கநாதன் தெருவும் தற்போது மூடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள டீக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது உணவு கட்டுப்பாட்டுத்துறை. டீ மாஸ்டருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவரை உடனே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில் உள்ள பாத்திரங்களை சுத்தகமாக வைத்துக்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.