ரூ.9 கோடி இழப்பீடு வேண்டும்.. நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கு.! ஏன்? என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரவி மோகன் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நடிகர் ரவி மோகன், கடந்த 2024ம் ஆண்டு பாபி டச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்துடன் இரு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டதாகவும, மேலும் அதற்காக 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் அவர்கள் படப்பிடிப்பை தொடங்காததால் தான் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் அதற்காக அவர்கள் 9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்னர் பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், தங்கள் நிறுவனத்தில் நடிகர் ரவி மோகன் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் போட்டார். அதற்காக ரூ.15கோடி சம்பளம் பேசி முன்பணமாக ரூ.6 கோடியை ரவி வாங்கியுள்ளார். ஆனால் தங்களது படங்களில் நடிக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களில் நடித்தார்.
மேலும் தற்போது ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக 'ப்ரோ கோட்' என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளார். எனவே எங்களிடம் வாங்கிய ரூ.6 கோடியை வட்டியுடன் திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், பதிலாக ரவி மோகனும் ரூ.9கோடி இழப்பீடு கேட்டு எதிர்மனு தாக்கல் செய்த நிலையில் இதுகுறித்து ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என கூறி இருவரின் வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: லியோ வெற்றியால் டபுள் மடங்கு உயர்வு.! கூலி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??
இதையும் படிங்க: முத்து மீனாவை நேருக்கு நேர் சந்தித்து இருவரும் கண்ணாலையே பேசிக்கொள்ளும் ரொமான்டிக் காட்சி! சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ....