இதனை செய்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

இதனை செய்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!


Tamilnadu cm talk about corona

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில், கொரோனா காரணமாக இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றளவும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் இந்த கொடூர வைரஸின் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திலே சென்னையில்தான் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இந்த கொடூர வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள்ஆகியவை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக ஆய்வு செய்தார்.

corona

அப்போது முதல்வர் கூறுகையில், கொரோனாவைப் பொறுத்தவரைக்கும், ஆரம்பத்தில் சிறிதளவு பரவி, பிறகு உயர்ந்து, அதன் பிறகுதான் தணியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோலத்தான் பல்வேறு நாடுகளிலே நிகழ்ந்திருக்கிறது. இதுதான் தமிழகத்திலும், இந்தியாவிலும் இருக்கிற நிலைமை.

அரசு அறிவிக்கின்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். அதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சாதாரண விஷயம் இல்லை. அரசு அறிவிக்கின்ற அறிவிப்புகளை மக்கள் பின்பற்றி நடந்தால் வைரஸ் பரவலை தடுக்க முடியும். இது பொதுமக்கள் கையில் தான் இருக்கிறது என முதலமைச்சர் தெரிவித்தார்.