அறிகுறி இல்லாமலேயே பரவும் கொரோனா! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!TAMILNADU CM TALK ABOUT CORONA

தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என 2-வது முறையாக ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

மிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

corona

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,  மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதித்ததாக கூறினார்.  அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் சிகிச்சைக்கு தயாராக உள்ளன.தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமலேயே கொரோனா வருவதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.