தமிழக அரசியலில் பேரதிர்ச்சி.. பாஜக மாநில துணைத்தலைவர் கைது.. பரபரப்பில் தொண்டர்கள்..!



tamilnadu-bjp-deputy-state-president-arrest-by-police

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி இராமலிங்கம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பரப்பட்டியில் பாஜக சார்பில் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி & பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி இராமலிங்கம் கலந்துகொண்டார். 

அந்த சமயத்தில், அங்குள்ள பாரத மாத கோவிலில் இருக்கும் மாதா சிலைக்கு கே.பி இராமலிங்கம் மாலை அணிவிக்க முயற்சிக்கவே, கோவிலுக்கு பூட்டு போடப்பட்டு இருந்ததால் பூட்டை உடைத்து பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

tamilnadu

இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, பாப்பரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் கே.பி இராமலிங்கத்தின் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். இது பாஜக தொண்டர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.