தமிழகம்

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

stepfather abused young girl


புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை 16 வயதுள்ள சிறுமி ஒருவர் உடலில் சூடு வைக்கப்பட்டு, பலமாக தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிறுமி எப்படி காயமடைந்தார் என சிறுமியின் தாயிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் மழுப்பியபடி பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 
அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, ரொம்ப வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். 

இந்தநிலையில் அந்த சிறுமியின் தாய் ராம்குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். இரண்டாவது கணவர் மூலம் அந்த பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளை, தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் ராம்குமார். இதுகுறித்த விஷயத்தை யாரிடமும் கூறினால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டிவந்துள்ளார்.

ஒருகட்டத்தில் ராம் குமார் தான் பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் 3 தங்கைகளையும் கட்டி வைத்து அடித்துள்ளார். இதனை தட்டி கேட்ட 16 வயது சிறுமியை அடித்து கம்பியை அடுப்பில் வைத்து சூடேற்றி உடம்பில் சூடு வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த கொடூர நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


Advertisement