தமிழகம்

நாடே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நேரத்தில், மதுவிற்காக தந்தை செய்த செயல்! மகன் எடுத்த விபரீத முடிவு!

Summary:

son murdered his father

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் லாரி டிரைவராக இருந்துள்ளார்.இவருக்கு இரண்டு  மகன்கள் உள்ளனர். நாகராஜ், கடந்த 3 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜ், மது குடிக்க பணம் கேட்டு தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனைப்பார்த்து நாகராஜின் இளையமகன் தமிழ்ச்செல்வன், தந்தையை கண்டித்துள்ளார். ஆனால் மதுபோதையில் இருந்த நாகராஜ், அவரது இளயமகனை கத்தியால் அவரது கையில் வெய்ட்டியுள்ளார். அதனை தடுக்கவந்த நாகராஜின் மனைவிக்கும் காயம் ஏற்பட்டது.

இதனைப்பார்த்து ஆத்திரமடைந்த நாகராஜின் மூத்த மகன் சேதுபதி, நாகராஜின் கையில் இருந்த கத்தியை பறித்து, நாகராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் சேதுபதி, காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனாவால் நாடே வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நேரத்தில், மதுபோதையில் நாகராஜின் முட்டாள்தனமான செயலால் அவரது குடும்பமே உச்சகட்ட கோவத்திற்கு சென்று, தற்போது அவரது மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement