தமிழகம்

திருமணமான ஒரே மாதத்தில் கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி! கடைசியில் வெளியான திடுக்கிடும் தகவல்

Summary:

Sivakanngai young girl

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை சேர்ந்த பையனை கடந்த மாதம் 11 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். திருமணமான ஒரு மாதத்திற்குள் அந்த பெண்ணுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் இதை பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த பெண் தான் சிவகங்கையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் போது அந்த கல்லூரியின் தாளாளர் சிவகுருதுரைராஜ் தனக்கு கூடுதல் மதிப்பெண் வாங்கி தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து சிவகுருதுரைராஜ் மீது சிவகங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 


Advertisement