BREAKING : மகிழ்ச்சி செய்தி! எவ்வித தாமதமும் இன்றி வங்கி கணக்கில் வந்த பணம்...! காலையிலேயே வெளியான குட் நியூஸ்..!!!
முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இந்த மாதம் நிம்மதி அளிக்கும் வகையில், உதவித்தொகை வழக்கமான தேதியிலேயே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட தாமதத்தால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர்கள், தற்போது உரிய நேரத்தில் பணம் கிடைத்ததால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ஏற்பட்ட தாமதம்
முதியோர் உள்ளிட்ட தகுதியான பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 4 அல்லது 5-ஆம் தேதிகளில் உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மாதம் தபால் நிலையங்களில் புதிய கணக்குகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகக் கூறி, பலருக்கான உதவித்தொகை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை அடுத்த மாதம் பெற... உடனே இதை போய் செய்யுங்க! இல்லையெனில் இனி வங்கி கணக்கில் பணம் கிடையாது...!!
இதனால் வழக்கமான தேதியில் பணம் கிடைக்காமல் பயனாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், கடும் தாமதத்துக்குப் பிறகு 20-ஆம் தேதிக்கு மேல் தான் பலரின் கணக்குகளில் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டது.
இந்த மாதம் வழக்கமான தேதியில் வரவு
கடந்த மாத நடைமுறைச் சிக்கலால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகள் அன்றாடத் தேவைகளுக்கான செலவுகளை சமாளிக்க சிரமப்பட்டனர். குறிப்பாக, மாத தொடக்கத்திலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் உதவித்தொகை தாமதமானது அவர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை எவ்வித தாமதமும் இன்றி வழக்கமான தேதியிலேயே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் ஏற்பட்ட குழப்பம் மீண்டும் ஏற்படுமோ என்ற கவலை நீங்கி, பயனாளிகள் தற்போது சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.