எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வங்கி கணக்கு முறையில் மாற்றம்...! தமிழகம் முழுவதும் உதவித்தொகை நிறுத்தம்? அரசு நிதியுதவி பெற அல்லேலப்படும் மக்கள்...!!!
தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை நடப்பு மாதத்தில் இதுவரை வரவு வைக்கப்படாததால் பயனாளிகள் கவலை அடைந்துள்ளனர். வழக்கமாக மாதத்தின் 4 அல்லது 5-ஆம் தேதிக்குள் பணம் கிடைக்கும் நிலையில், 20-ஆம் தேதியை கடந்தும் தொகை வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், அன்றாட செலவுகளுக்காக இந்த உதவித்தொகையை நம்பியிருப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
20-ஆம் தேதியை கடந்தும் வராத உதவித்தொகை
முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பு மாதத்தில் வழக்கமான காலக்கெடுவை கடந்தும் பணம் வரவு வைக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் அதிகாரிகளை அணுகி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஷ்...! பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து ... தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!!
மருத்துவச் செலவுகள், மருந்துகள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக இந்த தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பணம் கிடைக்காதது அவர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
தபால் அலுவலகத்தில் புதிய கணக்கு தொடங்க அறிவுறுத்தல்?
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பயனாளிகள் நேரில் சென்று கேட்டபோது, தற்போது பயன்படுத்தப்படும் வங்கிச் சேமிப்புக் கணக்குகள் இனி செல்லாது என்றும், அரசு நிதியுதவியைப் பெற தபால் அலுவலகத்தில் புதிய கணக்கு தொடங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் கணக்கு முறையில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் பயனாளிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் புதிய கணக்கு தொடங்குவதற்காக தபால் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை
உதவித்தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், புதிய கணக்கு தொடர்பான நடைமுறை மாற்றம் இருந்தால் அதுகுறித்து முறையாக அறிவிக்க வேண்டும் என்றும் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நிலுவையில் உள்ள அரசு நிதியுதவி தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: போடு வெடிய... அனைவருக்கும் தீபாவளி பரிசு! சற்றுமுன் தமிழக அரசு அறிவித்த ஹாப்பி நியூஷ்!!!