ஹாப்பி நியூஷ்...! பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து ... தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!!



tn-government-stops-crop-loan-recovery

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு முக்கிய நிவாரண அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அதை தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், அடுத்த சாகுபடி பருவத்தை கருத்தில் கொண்டு தகுதியுள்ள விவசாயிகளுக்கு புதிய கடன்களை விரைந்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் வசூலால் விவசாயிகள் புகார்

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணை மற்றும் நடைமுறைகள் முழுமையாக அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, நிலுவைத் தொகையை செலுத்துமாறு சில கூட்டுறவு வங்கிகள் அழுத்தம் கொடுத்ததாக விவசாயிகள் தரப்பில் புகார்கள் எழுந்தன. இதனால் கடன் தொகையை செலுத்த முடியாதவர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இதையும் படிங்க: BREAKING: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்.... சற்றுமுன் தமிழக அரசின் ஹேப்பி நியூஷ்!!!

மேலும், நிலுவைக் கடன் காரணமாக வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதாகவும், அடுத்தடுத்த சாகுபடிக்குத் தேவையான புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கடன் வசூலை நிறுத்த அரசு உத்தரவு

விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களுக்கான வசூல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30க்குள் புதிய கடன் வழங்க உத்தரவு

வரவிருக்கும் சாகுபடி பருவத்தை கருத்தில் கொண்டு, தகுதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் புதிய பயிர்க்கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கடன் வழங்கும் பணிகளை முடிக்க கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடன் வசூல் நடவடிக்கைக்கு தற்காலிக தடை மற்றும் புதிய பயிர்க்கடன் வழங்குவதற்கான காலக்கெடு ஆகிய அறிவுறுத்தல்கள், அடுத்த சாகுபடிக்குத் தயாராகி வரும் விவசாயிகளுக்கு நிவாரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: அதிஷ்டகார பாட்டி... முதல்வர் விஜய் அளித்த அன்பு பரிசு! சின்னக்காவூர் திடீர் விசிட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!!!