அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை அடுத்த மாதம் பெற... உடனே இதை போய் செய்யுங்க! இல்லையெனில் இனி வங்கி கணக்கில் பணம் கிடையாது...!!



tamil-nadu-social-security-pension-aadhaar-link

தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 2026 முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை கட்டாயமாகிறது. இதனால், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் மாதாந்திர உதவித்தொகை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

யாருக்கு எவ்வளவு உதவித்தொகை?

முதியோர், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதம் ரூ.1,200 நிதியுதவி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரே நாளில் ஒரே கிராமத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு! 19 வயது புதுப்பெண் வீட்டிலும், 45 வயது பெண் புளிய மரத்திலும் தொங்கிய உடல்! கிருஷ்ணகிரியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!!!

செப்டம்பர் முதல் ஆதார் இணைப்பு கட்டாயம்

ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆதார் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே இனி உதவித்தொகை நேரடியாக அனுப்பப்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறும் அனைவரும் தங்களது வங்கிக் கிளையை அணுகி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பணியை முன்கூட்டியே முடிப்பதன் மூலம் மாதாந்திர நிதியுதவி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யலாம். ஆதார் இணைப்பு இல்லாவிட்டால் உதவித்தொகை தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பெற எங்கு அணுகலாம்?

ஆதார் இணைப்பு தொடர்பான சந்தேகங்கள் அல்லது தேவையான உதவிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சிறப்புத் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை அணுகலாம். மேலும், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தனி வட்டாட்சியர் மையங்களிலும் விவரங்களைப் பெறலாம்.

பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகை உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: 2025 ஆம் ஆண்டே காவல்துறைக்கு போன வீடியோ ஆதாரம்! வீரமணி வழக்கை மூடி மறைக்க முயன்ற திமுக... அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!!!