சபாஷ்.. சரியான போட்டி.! மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நாம் தமிழர் சீமான் போட்டி.!

சபாஷ்.. சரியான போட்டி.! மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நாம் தமிழர் சீமான் போட்டி.!



seeman-talk-about-coming-assembly-election

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் நீண்ட வருடங்களாக அதிமுக மற்றும் திமுக இடையே தான் முதல்வர் வேட்பாளருக்கான போட்டி அதிகமாக இருக்கும். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா தரப்பினர் டிடிவி தினகரன் தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக என்ற கட்சியில் தனித்து போட்டியிட்டனர்.

தற்போது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை அவர்களுக்கு தமிழக பாஜக துணை தலைவர் பதவி கொடுத்த பிறகு பல கட்சிகளில் இருந்து பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதேபோல் நாம் தமிழர் கட்சிக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

seeman

இந்தநிலையில் வ.உ.சி அவர்களின் 84ஆம் ஆண்டு நினைவு தினத்தையடுத்து  நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சீமான் தலைமையில்
வ.உ.சி உருவப்படத்திற்கு மலர்மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நானும் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நானும் அதைதான் நினைக்கிறேன். ஆனால், அதுகுறித்து பிறகு தான் முடிவெடுக்கப்படும் என்று சீமான் தெரிவித்தார்.  கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 12,000 வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.