தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பல கோடிக்கு அதிபதி.! பெண்கள் மீதான சபலம்.! பேராசிரியை சீரழித்த நபருக்கு நேர்ந்த கதி.!
காஞ்சீபுரம் அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் அனிதா. 45 வயது நிரம்பிய இவர் திருமணமாகாதவர். இவர் காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் இவர் கடந்த 9-ந்தேதி தான் வசித்து வந்த வீட்டின் முதல் தளத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனிதாவின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து காஞ்சீபுரம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அனிதாவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தபோது அவர் கடைசியாக பேசியிருந்த காஞ்சிபுரம் அருகே நாயக்கன்பேட்டை அரிசி ஆலையின் உரிமையாளரும் அரசு பள்ளியின் தற்காலிக உடற்கல்வி ஆசிரியருமான சுதாகர் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், உயிரிழந்த அனிதாவும், சுதாகரும் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பணியாற்றும் போது இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது. அனிதா தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணி மாறுதல் அடைந்த பின்னும், இவர்களுக்கு இடையேயான காதல் தொடர்ந்துள்ளது. அனிதா மட்டுமல்லாமல் மேலும் சில ஆசிரியைகளுடனும் சுதாகர் பழகி வந்ததாக கூறப்படுகின்றது.
வேறு சில ஆசிரியைகளிடம் சுதாகருக்கு இருந்த தொடர்பு குறித்து அறிந்த அனிதா, சுதாகரிடம் அடிக்கடி சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நீண்ட நாளாக தொடர்பில் உள்ள தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் சுதாகரை அனிதா வற்புறுத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அனிதாவை தாக்கிவிட்டு சுதாகர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனையடுத்து ஆசிரியர் சுதாகரை போலீசார் கைது செய்துள்ளனர்.