சாத்தான்குளம் வழக்கில் தொடரும் சோகம்..! இந்த வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ பால்துரை உயிரிழப்பு..

Saththankulam murder case special police SI dead for corona


Saththankulam murder case special police SI dead for corona

சாத்தான்குளம் போலீசாரால் கைதுசெய்யப்பட்டு உயிரிழந்த தந்தை - மகன் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட காவலர்களில் ஒருவரான சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கில் ஒன்று சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கு. விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்தநிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்துவந்தநிலையில் விசாரணை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Saththankulam

இந்நிலையில் இந்த மரண வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட காவலர்களில் ஒருவரான சிறப்பு எஸ்.ஐ பால்துரை என்பவருக்கு கடந்த மாதம் 24-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறப்பு எஸ்.ஐ பால்துரை அவர்கள் நேற்று நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.