தமிழகம் Covid-19

சிரிச்சு சிரிச்சு முடியலடா சாமி..! ட்ரோன் கேமிராவை பார்த்து லுங்கி அவிழ்ந்து ஓடிய இளைஞர்கள்.!

Summary:

Salem police roundup youngster who played cricket

சமீபத்தில் கேரம்போர்ட் விளையாடிய நபர்களை ட்ரோன் மூலம் திருப்பூர் காவல்துறை விரட்டிய சம்பவம் வைரலானது. இந்நிலையியல், சேலம் நகர மலையடிவாரத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிலரை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் தலைதெறிக்க ஓட்டவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

கொரோனா காரணமாக மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி சிலர் வெளியே நடமாடுவது, இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது இப்படி பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், சேலம் நகர மலையடிவாரத்தில் சிலர் கிரிக்கெட் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வர, ட்ரோன் கேமிரா மூலம் அங்கே சென்ற போலீசார் கிரிக்கெட் விளையாடியவர்களை சுற்றி வளைத்தனர். கூட்டமாக விளையாடிய நபர்கள் கேமிரா தங்களை நோக்கி வருவதை பார்த்த உடன் தலைதெறிக்க ஓடுகின்றனர்.

அதில் ஒரு இளைஞர் லுங்கியை அவிழ்த்து தனது முகத்தை மூடிக்கொண்டு ஓடுகிறார். அவரை ட்ரோன் கேமிரா துரத்த ஒருகட்டத்தில் லுங்கியை கீழே விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடுகிறார். இனொரு நபர் முகம் தெரிய கூடாது என்பதற்காக மரத்திற்கு பின்னால் ஒளிந்துகொள்ள அவரையும் ட்ரோன் கேமிரா விடவில்லை.

மற்றொரு நபர் இலைகளை பறித்து தனது முகத்திற்கு நேராக வைத்துக்கொண்டு முகம் தெரியாமல் இருக்க அங்கிருந்து ஓடுகிறார். பார்க்கும்போதே பயங்கரமாக சிரிக்க வைக்கிறது இந்த வீடியோ. இந்த கூத்தை நீங்களும் பாருங்கள்.


Advertisement