அவருடன் ஆட வேண்டும்.. ஆசைப்பட்ட விஜய்.! மறுத்துவிட்ட பிரபலம்.! காமெடி நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!!
சேலம்: நைட்ஷோ சென்ற அதிமுக பிரமுகரின் மகள் கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்.!
சேலத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரின் மகள் உயிரிழந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சேலம் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா ரோடு பகுதியில் வசித்து வருபவர் பாரதி (வயது 34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுகவை சேர்ந்த டெல்லி ஆறுமுகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த நபர் என்று கூறப்படுகிறது. பாரதி பிஇ பயின்று சங்கரநகர் பகுதியில் செயல்பட்டு வரும் டியூஷன் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் அங்கேயே தங்கிக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
சிகரெட் பிடித்தபடி மயங்கிய பெண்மணி:
இவரது நண்பர் உதயசரண் (வயது 49) தனியார் மருத்துவமனையில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே நேற்று முன்தினம் இரவில் நைட் ஷோவுக்கு பாரதியும், உதயசரணும் சென்றுள்ளனர். பின் பாரதி தங்கி இருந்த அறையில் உதயசரணும் தங்கி இருக்கிறார். அப்போது பாரதி சிகரெட் பிடித்தபடி திடீரென மயங்கதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!

மரணத்தில் மர்மம்:
உடனடியாக உதயசரன் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு பாரதியை அழைத்துச் சென்றுள்ளார். வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாரதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அமலமானது. அதாவது பாரதிக்கும், உதயசரணுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது.
அதிமுக பிரமுகர் மகள் கொலை?
பாரதி மது மற்றும் சிகரெட் போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். உதயசரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்த நிலையில், இது தொடர்பான வாக்குவாதத்தில் கொலை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக உதயசரணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.