இதுல என்ன கெத்து? அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு போலீஸ் காட்டிய அதிரடி...!!!



rowdy-insta-reels-arrested-in-nellai

திருநெல்வேலியில் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக கூர்மையான ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (21) என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கையில் வைத்தபடி வீடியோக்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. வன்முறையை தூண்டும் வகையிலான பின்னணி இசையுடன் இந்த வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

அப்பகுதியில் தன்னை ஒரு ‘கெத்தான நபர்’ போன்று காட்டிக்கொள்ளும் நோக்கில் இசக்கிராஜா இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் கண்காணிப்பில் சிக்கிய ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையில் பதிவிடப்படும் வீடியோக்களை நெல்லை மாநகர போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: நெல்லையில் பரபரப்பு.. குடிநீர் போராட்டத்தில் ஊராட்சி தலைவர் கல்லால் அடித்து கொலை!

Thirunelveli

அந்த வகையில் சைபர் கிரைம் போலீசாரின் கண்காணிப்பில் இசக்கிராஜாவின் ரீல்ஸ் வீடியோக்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பழையபேட்டை போலீசார் விசாரணை நடத்தி, இசக்கிராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்ததாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இசக்கிராஜா கல்லூரி படிப்பைத் தொடராமலும், வேலைக்குச் செல்லாமலும் வீட்டில் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காகவோ, மற்றவர்களை அச்சுறுத்தும் வகையிலோ ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவதை போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதுபோன்ற பதிவுகளை வெளியிடும் நபர்களின் சமூக வலைதளக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சி! பள்ளிப் பேருந்து மீது கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து!!!