அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. திரையரங்குகளில் ‘GLADIATORS’ ட்ரெய்லர்!
நெல்லையில் பரபரப்பு.. குடிநீர் போராட்டத்தில் ஊராட்சி தலைவர் கல்லால் அடித்து கொலை!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதில் கல் ஒன்று மகாராஜனின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்வீச்சில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குறைந்த முதலீடு, அதிக வட்டி, டபுள் லாபம்.. தேனாய் பேசி திகட்ட திகட்ட கேடி வேலை செய்த தோழிகள்.. நெல்லையில் ஷாக்.!
குடிநீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டம் எதிர்பாராதவிதமாக ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான முழுமையான பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 7 மாத கர்ப்பிணி காதலி அடித்துக்கொலை.. நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.! சேலத்தில் திக்., திக் சம்பவம்.!